[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை அவதிக்குள்ளாக்க வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் எண்ணம் - கபில் சிபல்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

பணம் பலர்கிட்ட இருக்கலாம், ஆனா மனசு? அசத்தும் மும்பை மோடி

doctor-uday-modi-provides-free-lunch-to-aged-people-from-his-house-in-mumbai

ஆதரவற்ற 500 பேருக்கு தினமும் இலவசமாக உணவு கொடுத்து அசத்தி வருகிறார் மும்பையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர்.

வயதான பெற்றோர்களை கைவிட்டுவிட்டுச் செல்லும் பிள்ளைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி கைவிடப்பட்ட வயதானவர்களுக்கு உதவி செய்வதை கடமையாகக் கொண்டிருக்கிறார் மும்பையைச் சேர்ந்த உதய் மோடி. இவர் ஒரு டாக்டர்.

‘என் சொந்த ஊர் குஜராத் மாநிலம் அம்ரேலி. மும்பைக்கு பயிற்சிக்காக வந்தேன். அப்புறம் இங்க மிரா- பயந்தர் பகுதியிலயே செட்டிலாகிட்டேன். ஆரம்பத்தில் சிகிச்சைக்கு வரும் வயசானவங்களைப் பார்த்தா பாவமா இருக்கும். சிலர், பெற்ற பிள்ளைகளால கைவிடப்பட்டவங்கன்னு தெரிஞ்சது. இதைக் கேள்விபட்டதும் ரொம்ப வருத்தமா இருந்தது. பத்து ரூபா கொடுத்து, வடா பாவ் கூட அவங்களால வாங்க முடியாது. அவங்களுக்கு உதவலாம்னு முடிவு பண்ணினேன். முதல்ல 11 பேருக்கு 11 டிபன் பாக்ஸ் ரெடி பண்ணி, தினமும் அவங்களைத் தேடி போய் டிபன் கொடுத்துட்டு வந்தேன். இப்போ அந்த டிபன் பாக்ஸ், இருநூறா மாறியிருக்கு’ என்கிறார் இந்த மும்பை மோடி.

ஷரவன் டிபன் சர்வீஸ் என்கிற பெயரில் இவர் இலவசமாக கொடுக்கும் டிபனில், ஆறு சப்பாத்தி, பருப்பு, குழம்பு, கொஞ்சம் சோறு. ஞாயிற்றுக் கிழமைகள் வேறு மெனு. இதற்காக இவர் வீட்டில் இரண்டு அடுப்புகள் எரிந்துகொண்டிருக்கிறது. ஒன்றில், சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு ரெடியாகுமாம். இரண்டு சமையல் காரர்கள் இதற்காகவே இருக்கிறார்கள். இரண்டு வேன்கள் மூலம் இந்த டிபன்பாக்ஸ்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக மாதம் 3 லட்சம் ரூபாய் செலவழிக்கிறார் இவர். இவரின் சேவையை பாராட்டி, ஏராளமானோர் உதவி வருகிறார்கள்.

‘பணம் நிறைய பேர்கிட்ட இருக்கலாம். ஆனா மனசு. வெல்டன் மிஸ்டர் உதய் மோடி’என்று மும்பையில் புகழ்கிறார்கள் இவரை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close