[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியீடு
  • BREAKING-NEWS மாநில தலைமையின் அனுமதியின்றி, தன்னிச்சையாக அறிக்கை விடக்கூடாது- மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS குடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு - திருமாவளவன்
  • BREAKING-NEWS அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் போராட்டம் வலுக்கும் நிலையில் ராணுவ வீரர்கள் குவிப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டால், அது ஜனநாயகத்தின் கருப்பு பக்கமாக மாறிவிடும் - வைகோ
  • BREAKING-NEWS பிஎஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 50வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி - இஸ்ரோ தலைவர் சிவன்

அடக் கொடுமையே: சொந்த அம்மாவைக் கொல்ல ஆள் செட் பண்ணிய மகன்!

a-mother-killed-by-her-son

பணம் தராத அம்மாவைக் கொல்ல, ஆள் செட் பண்ணிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை மேற்கு போரிவிலி பகுதியை சேர்ந்தவர் தீபக். கார்மென்ட் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். இவர் மனைவி மீனா செட்டா. இவர்கள் மகன் தைரியா. கல்லூரி ஒன்றில் பி.காம் படித்துவருகிறார். மீனா தனது வீட்டிலேயே சூதாட்டம் நடத்தி வந்தாராம். இதனால் அவரிடம் பணப்புழக்கம் தாராளமாக இருந்திருக்கிறது. இதையடுத்து அவரிடம் அடிக்கடி பணம் கேட்பார் தைரியா. பாசக்கார மகனுக்குக் கொடுத்து வந்தார் மீனா. அம்மாவிடம் பணத்தை வாங்கி, வேறொரு இடத்தில் சூதாடச் செல்வாராம் தைரியா. இது தெரிய வந்ததும் பணம் கொடுப்பதை நிறுத்தினார் மீனா. கடுப்பான மகன் அம்மாவிடம் அடிக்கடித் தகராறு செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பணம் தராத அம்மாவைக் கொல்ல முடிவு செய்தார் தைரியா. இதற்காக தனது நண்பர் ஜெபராஜ் டேவிட்டிடன் விஷயத்தைச் சொன்னார் . ‘உனக்கு 50 ஆயிரம் ரூபாய் தர்றேன். அட்வான்ஸா 20 ஆயிரம் வச்சுக்கோ’ என்று கொடுத்தார். நண்பன் சொல் தட்டாத ஜெபராஜ், வீட்டுக்குள் புகுந்து மீனாவை கத்தியால் கொடூரமாகக் குத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ஜெபராஜை மடக்கிப் பிடித்தனர். மீனாவை மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டதால் சீரியசாக இருக்கிறார். தைரியாவையும் ஜெபராஜையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தைரியாவின் அப்பா கூறும்போது, ‘என் மகன் இப்படி செய்திருக்க மாட்டான். வேறு காரணம் ஏதும் இருக்கும்’ என்றார்.

பெற்ற அம்மாவை, மகனே கொலை செய்ய சொன்ன சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close