[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

சாலைகளில் செல்ஃபி கூடாது: இளைஞர்களுக்கு சச்சின் அறிவுரை

no-selfie-in-riding-sachin-advised-youths

கார்களிலும், இருசக்கர வாகனங்களிலும் செல்லும்போது பிறருடன் செல்ஃபி எடுப்பதை தவிர்க்குமாறு இளைஞர்களை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹைதராபாத் சென்ற அவர், மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். ஓரிடத்தில் சச்சினின் கார் மெதுவாகச் சென்றபோது, இருசக்கர வாகனம் ஒன்றில்‌ வந்த இளைஞர்கள், அவரைப் பார்த்துவிட்டனர். உடனே அவர்கள், இருசக்கர வாகனத்தில் இருந்த படியே, மொபைல் மூலம் சச்சினுடன் செல்ஃபி எடுக்க முற்பட்டனர். இதனை எதிர்பாராத சச்சின், சாலையில் சென்று கொண்டிருக்கும்போது இவ்வாறு செல்ஃபி எடுக்கக்கூடாது என்று அந்த இளைஞர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடாது ‌என்றும் அவர்களுக்‌கு டெண்டுல்கருக்கு அறிவுறுத்தினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close