[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

டூரிசமா, தீவிரவாதமா?: மோடி கேள்வி

modi-questions-need-tourism-or-terrorism

தீவிரவாதம் அல்லது சுற்றுலா ஆகியவற்றில் எதை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்பதை காஷ்மீர் மக்கள் யோசிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

காஷ்மீரில் ஸ்ரீநகரையும், ஜம்முவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் செனானி–நஷ்ரி இடையே உள்ள 9.2 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே நீளமான இந்த சுரங்கப் பதை அமைக்கும் பணி, கடந்த 2011–ம் ஆண்டு தொடங்கியது. ரூ.3,720 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்தச் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் அவர் சிறப்பு வாகனம் மூலம் அந்த சுரங்கப்பாதையில் சிறிது தூரம் சென்று வந்தார்.

பின்னர் நடந்த விழாவில் அவர் பேசும்போது,’இங்கு ஒரு பக்கம் தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்கள், கற்களை வீசுகிறார்கள். மற்றொரு பக்கம் இளைஞர்கள் கற்களை உடைத்து காஷ்மீரின் எதிர்காலத்துக்கு உழைக்கிறார்கள். காஷ்மீர் மக்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் முன் இரண்டு பாதைகள் இருக்கின்றன. ஒன்று சுற்றுலா மற்றொன்று தீவிரவாதம். இதில் எதை நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்பதே கேள்வி. கடந்த 40 வருடங்களாக அதிகமான ரத்தம் இங்க சிந்தப்பட்டுவிட்டது. ஆனால் அதனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. பல தாய்கள், தங்கள் மகன்களை இழந்திருக்கிறார்கள். பல இழப்புகளை சந்தித்துவிட்டோம். சுற்றுலா இங்கு முன்னிலைப்படுத்தப்பட்டால், உலகின் சிறந்த சுற்றுலா மையமாக காஷ்மீர் இருக்கும்’ என்றார் பிரதமர் மோடி.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close