[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

ஆசிட் குடித்த பெண்ணுடன் செல்ஃபி: அட்டூழிய போலீசார் சஸ்பென்ட்

up-women-cops-click-selfies-near-acid-attack-survivor-suspended

உத்தரப்பிரதேசத்தில் ஆசிட் குடித்தப் பெண்ணுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பெண் போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அலகாபாத் - லக்னோ இடையே செல்லும் கங்கா கோமதி எக்ஸ்பிரஸ் ரயிலில் 45 வயதான பெண் ஒருவர் நேற்று முன்தினம் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது 2 பேர் வலுக்கட்டாயமாக அவரை ஆசிட் குடிக்க வைத்தனர். அவர் கதறித்துடித்தார். இதையடுத்து லக்னோ ரயில் நிலையத்தில் இறங்கிய அவர் ரயில்வே போலீசில் புகார் செய்தார்.

ஆசிட் குடிக்க வைக்கப்பட்டதால், பேச முடியாமல் இருந்த அந்தப் பெண், தன் மீது நடந்த நான்காவது தாக்குதல் இது என குறிப்பிட்டார். இதற்கு முன் சொத்து தகராறு காரணமாக, கடந்த 2009-ஆம் ஆண்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஆசிட் வீசப்பட்டேன். 2012-ஆம் ஆண்டில் கத்தியால் தாக்கப்பட்டேன். 2013-ஆம் ஆண்டில் மீண்டும் ஆசிட் வீச்சுக்கு உள்ளானேன் என்று அவர் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர் லக்னோ மன்னர் ஜார்ஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பெற்ற அவருடன் பெண் போலீசார் மூன்று பேர் படுக்கையில் படுத்தபடி செல்ஃபி எடுத்தனர். இது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து அவர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த பெண் கொடுத்த புகாரின் பேரின் ஆசிட் குடிக்க வைத்ததாக இரண்டு பேரை போலீஸ் கைது செய்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close