[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

ரயிலுக்கு ஓனரானார் பஞ்சாப் விவசாயி

punjab-farmer-wins-train-in-legal-fight-with-indian-railways

லூதியானா விவசாயி சம்பூரன் சிங், ‘ஸ்வ‌ர்ண சதாப்தி’ ரயிலின் உரிமையாளராகி இருக்கிறார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர் சம்பூரன் சிங். விவசாயி. ரயில் தண்டவாளம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டபோது , சம்பூரன் சிங்கும் தனது நிலைத்தைக் கொடுத்தார். அந்த நிலத்துக்கான உரிய இழப்பீட்டை ரயில்வே நிர்வாகம் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சிங்.

இதில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் ரயில்வே நிர்வாகம் அந்த தொகையை வழங்க மறுத்ததால் சம்பூரன் சிங் மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். இந்த நிலையில் ‘ஸ்வர்ண சதாப்தி’ ரயிலையும் லூதியானா ரயில் நிலைய அதிகாரி அறையையும், விவசாயிக்கு வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து நீதிமன்ற ஆணையை எடுத்து கொண்டு சம்பூரன் சிங் வழக்கறிஞரோடு ரயில் நிலையம் சென்று, ரயில் மீதான தனது உரிமையை தெரிவித்தார். உரிய இழப்பீட்டை வழங்கவில்லை எனில் ரயிலை ஏலம் விடவும் வாய்ப்புள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close