[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

காணாமல் போன மதகுருக்கள், நாளை திரும்புகிறார்கள்

indian-priest-turned-to-their-homeland

பாகிஸ்தானில் காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட இந்தியாவை சேர்ந்த இஸ்லாமிய மதகுருக்களின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளது. இருவரும் நாளை தாயகம் திரும்புகின்றனர்.

டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் தர்காவை சேர்ந்த மதகுருக்கள் அசிப் நிஸாமி மற்றும் நஸிம் நிஸாமி ஆகியோர் பாகிஸ்தானின் லாகூருக்குச் சென்றிருந்தனர். இந்த நிலையில் இருவருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், பாகிஸ்தான் உளவு துறை தடுப்பு காவலில் வைத்திருப்பதாகக் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக, இந்திய அரசும் பாகிஸ்தான் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியது. இந்தச் சூழலில் இருவரும் கராச்சி நகரில் உறவினர்களை பார்க்கச் சென்றிருந்ததும் அங்கு, தகவல் தொடர்பு வசதிகள் இல்லாததால் தொடர்பு கொள்ள முடியாமல் போனதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அவர் நாளை இந்தியா திரும்புகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close