[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

'முத்தலாக்' எதிர்ப்பு: ஆர்எஸ்எஸ்சின் முஸ்லிம் அமைப்பு கையெழுத்து இயக்கம்

triple-talaq-1-million-muslim-women-sign-rss-backed-petition-against-the-practice

மூன்று முறை, ‘தலாக்’ கூறி, விவாகரத்துபெறும் முஸ்லிம்களின் நடைமுறையை எதிர்த்து ஆர்எஸ்எஸ்சின் முஸ்லிம் அமைப்பு கையெழுத்து இயக்கம் நடத்திவருகிறது.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் இஸ்லாமிய அமைப்பான முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் (எம்.ஆர்.எம்) ‘முத்தலாக்’ முறையை ஒழிக்ககோரும் இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது. இதில் பெரும்பாலான கையொப்பங்கள் முஸ்லிம் பெண்களுடையது என்று அது தெரிவித்துள்ளது. இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்தியா முழுவதும் உள்ள பத்து லட்சம் முஸ்லிம்கள் கையெழுத்துப் போட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே பல பெண்கள் இம்முறைக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்துள்ளனர். இந்த முறை பல இஸ்லாமிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது எனவும் உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close