JUST IN
 • BREAKING-NEWS ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் வேட்பாளர் மீராகுமார் நாளை காலை 11.30 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்
 • BREAKING-NEWS திருவண்ணாமலை: மேல்செங்கத்தில் கிணற்றில் தூர்வாரும் பணியின் போது மண் சரிவில் சிக்கி ஒருவர் பலி
 • BREAKING-NEWS தனியார் பால் பொருட்களில் காஸ்டிக் சோடா, பிளிச்சீங் பவுடர் கலப்படம்: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
 • BREAKING-NEWS ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது: ஓஎன்ஜிசியின் காவிரி படுகை மேலாளர் பவன்குமார்
 • BREAKING-NEWS சென்னை சூளை பகுதியில் உள்ள மரக்கட்டை சேமிப்பு கிடங்கில் தீ விபத்து
 • BREAKING-NEWS ஜூலை 1ஆம் தேதி பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் சென்னை வருகை
 • BREAKING-NEWS தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில் லாரியில் இருந்து அமிலம் கசிந்து ஒருவர் படுகாயம்
 • BREAKING-NEWS தமிழகத்தில் இரட்டை குவளை முறை வேதனை தரக்கூடியது: வைகோ
 • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 179 புள்ளி குறைந்து 30,958ல் வர்த்தகம் முடிவு
 • BREAKING-NEWS அரசு பள்ளிகளில் அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக்கூடாது?: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
 • BREAKING-NEWS நடிகர் சங்க கட்டட கட்டுமான பணிகளுக்கான தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
 • BREAKING-NEWS அருப்புக்கோட்டையில் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட வழக்கில் எஸ்ஐ கைது
 • BREAKING-NEWS லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தலைமையில் குழு அமைப்பு: பிசிசிஐ
 • BREAKING-NEWS மதுரை: திருப்பரங்குன்றத்தில் லாரி மோதி பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி பலி
இந்தியா 17 Mar, 2017 01:02 PM

2019 நாடாளுமன்றத் தேர்தல்: இப்போதே வேலையை தொடங்கினார் மோடி

Cinque Terre

2019-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலையை இப்போதே தொடங்கிவிட்டார் பிரதமர் மோடி. சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி மட்டும் போதாது. நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் அரியணையில் உட்கார வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் உள்ளார்.

அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வின் கை ஓங்கியே இருந்தது. நாட்டின் அதிக வாக்காளர்களை கொண்ட மாநிலமாக உள்ள உத்தரப்பிரதேசத்திலும் உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் பாஜக தான் ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பின்னடைவையே சந்தித்தன.

4 மாநில வெற்றியை சுவைத்த பின் பாஜக-வின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் அண்மையில் நடந்துள்ளது. இதில் பேசிய பிரதமர் மோடி, வெற்றியை சுவைத்துவிட்டாமே என்று ஓய்வில் இருந்துவிட மாட்டேன். உங்களையும் ஓய்வில் இருக்க விட மாட்டேன் என பேசியுள்ளார்.

வரவிருக்கும் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டே மோடி இவ்வாறு பேசியுள்ளார். மக்களவைத் தேர்தலிலும் அதிகப்படியான எம்.பி.க்களை வென்று தொடர்ச்சியாக 2-ஆவது முறையாக ஆட்சியமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது இதன் மூலம் தெரிகிறது.

இதற்காக அம்பேத்கர் பிறந்த நாளான (ஏப்ரல் 14)ஆம் தேதியை பாஜக சார்பில் சிறப்பாக கொண்டாட தொண்டர்களை மோடி கேட்டுக்கொண்டுள்ளார். அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவை ஒரு வாரம் கொண்டாடவும், அப்போது அம்பேத்கரிகன் சாதனைகளை மக்களிடம் எடுத்துச்சொல்லவும், பிரதமர் மோடி தொண்டர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

இப்போதைய இளைஞர்கள் செய்தித்தாள், தொலைக்காட்சிகளை பயன்படுத்துவதை விட தற்போது மொபைல் ஃபோனை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே அவர்களுக்கேற்றவாறு அணுகி கட்சியை பலப்படுத்துங்கள் எனவும் மோடி அந்தக் கூட்டத்தில் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதனிடையே, அரசாங்க திட்டத்திற்கான தூதர்களாக இளைஞர்கள் நியமிக்கப்படுவார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இளைஞர்களின் வோட்டுகளையும் அதன் மூலம் வெகு மக்களின் வாக்குகளையும் பெற பாஜக திட்டமிட்டுள்ளது தெரிகிறது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads