[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

பரிசு பொருள் வழக்கில் ஜெயலலிதா விடுவிப்பு

gift-case-jayalalitha-lifts

பரிசு பொருள் வழக்கில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதா 1992-ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது அவரது பிறந்த நாளுக்கு ஏராளமான பரிசு பொருட்களும், காசோலைகளும் வந்தன. இதன் மதிப்பு, இரண்டு கோடி ரூபாய் ஆகும். முதல்வராக இருப்பவர் தனக்கு வரும் பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும். ஆனால், பரிசு தொகையைத் தனது சொந்த வங்கிக் கணக்கில் ஜெயலலிதா டெபாசிட் செய்ததாகப் புகார் கூறப்பட்டது. இதுபற்றி ஜெயலலிதா, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் இவ்வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது சிபிஐ. இந்த வழக்கு, விசாரணைக்கு இன்று வந்தது. ஜெயலலிதா மற்றும் அழகு திருநாவுக்கரசு இறந்துவிட்டதால், வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.செங்கோட்டையன் மீதான வழக்கு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close