[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

ஓட்டுக்கு பணம்... சர்ச்சையில் சிக்கிய அகிலேஷ் யாதவ்..!

after-arvind-kejriwal-and-manohar-parrikar-now-akhilesh-yadav-asks-voters-to-accept-money

பணம் கொடுத்தால் பெற்றுக்கொள்ளுங்கள் என வாக்காளர்களை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளார். மனோகர் பாரிக்கர், அர்விந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து தற்போது அகிலேஷ் யாதவ் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இங்குள்ள பாதோகி நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவ், வேறு கட்சியிலிருந்து வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக செய்தி வருவதை தான் கேள்விப்படுவதாக கூறினார். உங்களுக்கு யாராவது வாக்களிக்க சொல்லி பணம் கொடுத்தால் அதனை பெற்றுக்கொள்ளுங்கள். பின் மறக்காமல் தனது சின்னமாக சைக்கிளுக்கு வாக்களிக்குபடி கேட்டுக்கொண்டார்.

பணத்திற்கு வாக்களிக்க வேண்டாம் என வாக்காளர்களை தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலிலும் வலியுறுத்தி வரும் நிலையில், அகிலேஷ் யாதவ் இவ்வாறு பேசியது பெரும் சர்சைசையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கோவாவில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும் இதனைப்போன்றே, பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என வாக்காளர்களை கேட்டுக்கொண்டிருந்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையமும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும் தேர்தல் விதிமுறை அமலில் இருக்கும் இடத்தில் பேசும்போது பார்த்து பேச வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்ற செயலில் ஈடுபட கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதேபோல் டெல்லி முதல் அமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலும் கோவாவில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசும்போது, பணம் கொடுத்தால் பெற்றுக்கொள்ளுங்கள் என பேசியிருந்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் கெஜ்ரிவால் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close