[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

காங்கிரஸ் ஊழலால் நாடே அதிர்ந்தது: மோடி

the-country-was-shaken-by-congress-corruption-modi

காங்கிரசின் ஊழலால் நாடே அதிர்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தின் போது 500, ஆயிரம் ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் தம்மை நாடாளுமன்றத்தில் பேச விட்டால் பூகம்பம் ஏற்படும் என்பதற்காகத்தான் தன்னைப் பேச விடவில்லை என ராகுல் காந்தி கூறியிருந்தார்.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து பிரதமர் மோடி மக்களவையில் பேசிய மோடி, காங்கிரஸ் ஆட்சியில், நாடு முழுவதும் ஊழல் இருந்தது என்றும் அதனால்தான் நாடே அதிர்ந்ததாகவும் கூறினார். ஊழல் அடையாளத்தை வைத்துள்ளவர்களிடம் எப்படி சேவை அல்லது நேர்மையான கொள்கைகளை எதிர்பார்க்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்திராகாந்தி கொண்டு வந்த அவசரநிலையின் போது ஜனநாயகம் நசுக்கப்பட்டதும், எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதும், பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டதும் நாடே கண்ட மறக்க முடியாத அனுபவம் என்றும் அவர் கூ‌றினார். மக்கள் சக்தியால்தான் ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவர் பிரதமராக முடிந்தது என்றும் மோடி கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close