[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

இன்றே பட்ஜெட்.. அனைத்து கட்சிகளும் ஒப்புதல்..?

all-parties-approved-to-tabled-budget-today

மத்திய பட்ஜெட்டை இன்றே தாக்கல் செய்ய அனைத்துக் கட்சிகளும் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே காலை 11 மணிக்கு திட்டமிட்டபடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத்தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.பி. ஈ.அகமது திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை உயிரிழந்தார். பதவியில் இருக்கும் எம்.பி ஒருவர் உயிரிழந்தால் நாடாளுமன்ற அவைகளை ஒத்திவைப்பது மரபு. அதன்படி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படாமல் ஒத்திவைக்கப்படலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் மத்திய பட்ஜெட்டை இன்றே தாக்கல் செய்ய அனைத்துக் கட்சிகளும் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஏற்கனவே திட்டமிட்ட படி காலை 11 மணிக்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் எனவும் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close