[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்: பிரதமர் மோடி விமர்சனம்

pm-modi-accusations-on-congress

காங்கிரஸ் கட்சி தனது ‌அடையாளத்தை இழந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஜலந்தரில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல் என்று வர்ணித்தார். ஒவ்வொரு மாநிலத்திலும் பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தங்களை காத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சியினர் முயல்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-அகாலி தளம் கூட்டணியை வெற்றி பெறச்செய்வது அவசியம் என்றும் மோடி கேட்டுக் கொண்டார். பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மாநில நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்றும், அவர் மீண்டும் முதல்வராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். தனது தலைமையிலான மத்திய அரசு ஊழலை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மோடி கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close