[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்
  • BREAKING-NEWS நீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்

பிரதமர் மோடியின் ரொக்கமில்லா பரிவர்த்தனை...பாஜக இதழை காசோலை மூலம் பெற்றார் ..!

pm-modi-goes-cashless-buys-lifetime-subscription-of-bjp-mouthpiece-kamal-sandesh-through-cheque

பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான கமல் சந்தேஷ் இதழின் வாழ்நாள் சந்தாவை பிரதமர் மோடி காசோலை மூலம் செலுத்தினார்.

நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறும்படி பிரதமர் மோடி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் குறித்து தெரிந்தவர்கள் அதுகுறித்து தெரியாதவர்களுக்கு சொல்லித்தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான கமல் சந்தேஷ் இதழை ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை மூலம் பிரதமர் மோடி பெற்றுள்ளார். கமல் சந்தேஷ் இதழை வாழ்நாள் முழுவதும் பெறுவதற்கான சந்தா தொகையை பாரத ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காசோலை மூலம் செலுத்தி அவ்விதழை பிரதமர் மோடி பெற்றுள்ளார். இந்த தகவலை கமல் சந்தேஷ் இதழின் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். கமல் சந்தேஷ் இதழின் வாழ்நாள் சந்தாவை செலுத்தியுள்ள முதல் பாஜக தொண்டர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close