[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்:அன்சாரி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

ansari-calls-all-party-meeting-before-budget-session

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஹமித் அன்சாரி தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில், நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த ஒத்துழைக்குமாறு அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகளிடமும் அன்சாரி கேட்டுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க அனுமதிக்குமாறு எதிர்க்கட்சிகள் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என கூறப்படுகிறது. இதனிடையே, காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்களுடன் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட வேண்டிய பிரச்னைகள் பற்றி அப்போது முடிவெடுக்கப்படும் என தெரிகிறது‌. வரும் 23ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், 25ஆம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 29ஆம் தேதி நாட்டின் பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close