[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆதரவுடன் முதல்வரானார் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ கலிகோ புல்

kalikho-pul-sworn-in-as-new-chief-minister-of-arunachal-pradesh

குடியரசு தலைவர் ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அருணாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ கலிகோ புல் முதலமைச்சராக பதவியேற்றார்.

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 11 ஏம்எல்ஏக்கள், 2 சுயேட்சை உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் அதிருப்தி ஏம்.எல்.ஏக்கள் உட்பட 31 உறுப்பினர்களின் ஆதரவுடன் கலிக்கோ புல் ஆட்சி அமைத்துள்ளார். அவருக்கு ஆளுநர் ஜே.பி ராஜ்கோவா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

முன்னதாக புதிய முதலமைச்சர் பதவி ஏற்பதற்கு இடைக்கால தடைவிதிக்கக் கோரி காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 60 உறுப்பினர்களை கொண்ட அருணாச்சலபிரேதச சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 47 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதில் 21 எம்எல்ஏக்கள் முன்னாள் முதலமைச்சர் நபாம் துகிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதால் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close