[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

ஆண்டுதோறும் 5% மதுக்கடைகள் மூடப்படும்.. பஞ்சாப் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

punjab-congress-election-manifesto

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார். இந்த நிகழ்வில் மாநில காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

121 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆண்டுதோறும் 5 சதவிகித மதுக்கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஐபி கலாசாரம் ஒழிக்கப்படும். ஆட்சிக்கு வந்த 30 நாட்களுக்குள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சிக்கு 10,000 கோடி ரூபாய் தேவைப்படும் எனத் தெரிகிறது. வருவாயை அதிகரித்து அரசாங்க செலவினங்களை குறைப்பதன் மூலம் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியும் என காங்கிரஸ் நம்புகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close