[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

திருப்பதி உண்டியலில் குவியும் பழைய நோட்டுகள்..!

old-notes-in-tirupathi-e-hundi

பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்வதற்கான அவகாசம் கடந்த மாதமே நிறைவடைந்த நிலையில் அவற்றை கோயில் உண்டியல்களில் செலுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்துவற்காக கால அவகாசம் கடந்த டிசம்பர் மாதம் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல்களில், கடந்த 31-ம் தேதியில் இருந்து தற்போது வரை ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செலுத்தப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் செலுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் திருமலை தேவஸ்தான செயல் அலுவலர் சாம்பசிவ ராவ் தெரிவித்துள்ளார்.

ரூபாய் தட்டுப்பாடு காரணமாக உண்டியல்களில் வழக்கத்தை விட குறைவான காணிக்கையே சேர்வதாகவும் திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close