[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

தள்ளிப்போகுமா மத்திய பட்ஜெட்?

is-model-code-of-conduct-in-poll-bound-states-affects-union-budget

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலால் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தராகண்ட் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கு பிப்ரவரி 4 முதல் மார்ச் 8 வரை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவது போல இருக்கலாம் என்பதால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. தேர்தல் நியாயமாகவும் தூய்மையாகவும் நடைபெற வேண்டுமெனில் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யக் கூடாது என பகுஜன் சமாஜ் கட்சி கூறியுள்ளது. தேர்தல் நடப்பது மாநில சட்டப்பேரவைகளுக்கே என்ற நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மத்திய அரசால் தாக்கல் செய்யப்படும் பொதுபட்ஜெட்டுக்கு இடையூறாக இருக்காது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. பட்ஜெட்டில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் பெயரைக் குறிப்பிட்டு திட்டங்கள் அறிவிக்கப்படாமல் இருக்கும் வரை தேர்தல் விதிகளால் பட்ஜெட்டுக்கு பாதிப்பில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பரிசீலித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close