[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலை

உ.பி.யில் பிப்.11-ல் தேர்தல்... 7 கட்டங்களாக நடைபெறுகிறது

5-state-election-date-announced

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 27–ந்தேதியுடன் முடிவடைகிறது. இதேபோல் கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 3 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் மார்ச் 18–ந்தேதியும், உத்தரகாண்ட் சட்டசபையின் பதவிக்காலம் மார்ச் 27–ந்தேதியும் முடிவடைகிறது.

இந்நிலையில் 5 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி இன்று அறிவித்துள்ளார்.

அதன்படி கோவா, பஞ்சாப்பில் ஒரே கட்டமாக பிப்ரவரி 4-ஆம் தேதியும், உத்தரகாண்ட்டில் ஒரே கட்டமாக பிப்ரவரி 15-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.

மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் மார்ச் மாதம் 4-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் மாதம் 8-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி

முதல் கட்ட தேர்தல்-பிப்ரவரி 11

2-ஆம் கட்ட தேர்தல்- பிப்ரவரி 15

3-ஆம் கட்ட தேர்தல்- பிப்ரவரி 19

4-ஆம் கட்ட தேர்தல்- பிப்ரவரி 23

5-ஆம் கட்ட தேர்தல்- பிப்ரவரி 27

6-ஆம் கட்ட தேர்தல்- மார்ச் 4

7-ஆம் கட்ட தேர்தல்- மார்ச் 8

5 மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மார்ச் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close