[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

ரயில் நிலையங்களில் உள்ள ஓய்வறைகளுக்கு 5% தள்ளுபடி..!

5-discount-to-the-rest-rooms-at-railway-stations

IRCTC இணையதளத்தின் மூலம் ரயில் நிலையங்களில் ஓய்வறைகள் முன்பதிவு செய்யும்போது, மொத்த கட்டணத்தில் 5 சதவீதம் தள்ளுபடி‌ செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக IRCTC அதிகாரிகள் புதிய தலைமுறைக்கு அளித்துள்ள தகவலில், நாளை முதல் இத்திட்டம் அமலுக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் கொண்ட வரப்‌படுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் உள்ள ஓய்வறைகளை அதிகபட்சமாக 48 மணி நேரத்திற்கு முன்பாக முன்பதிவு செய்ய முடியும் என்றும், முக்கிய ரயில் நிலையங்களில் சேவை வரியுடன் கூடிய கட்டணம் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close