[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை: புத்தாண்டுக்கு முன் தொலைக்காட்சியில் விளக்குகிறார் பிரதமர்?

pm-modi-likely-to-address-nation-on-new-year-eve

பண மதிப்பிழப்பு குறித்து. பிரதமர் மோடி புத்தாண்டு தினத்திற்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் விளக்கமளிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கருப்புப் பண ஒழிப்பு மற்றும் கள்ளநோட்டு புழக்கத்தைத் தடுப்பதற்காக புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி, கடந்த நவம்பர் 8ம் தேதி அறிவித்தார். மக்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார். இதனால் புழக்கத்தில் இருந்த 86 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பச் செல்லும் சூழல் ஏற்பட்டது. பழைய ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிதாக 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

பணமதிப்பிழப்பு விவகாரத்தால் ஏற்படும் குறுகியகால சிரமங்களை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதன்பின்னர் நிலைமை சீராகும் என்றும் பிரதமர் மோடி பல்வேறு தருணங்களில் குறிப்பிட்டார். இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையே முடங்கி விட்டதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் 50 நாட்களில் தீரும் என பிரதமர் முன்பே பலமுறை தெரிவித்திருந்த நிலையில் அது குறித்து அவர் விளக்கமளிக்க கூடும் எனத் தெரிகிறது. நாளை அல்லது நாளை மறுநாள் இந்த உரை இருக்கும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல, பண மதிப்பிழப்பு விவகாரம் தொடர்பான முக்கியமான அறிவிப்பினை பிரதமர் மோடி ஜனவரி 2ம் தேதி வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close