[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

ரொக்கமில்லா பரிமாற்றம்: ஸ்லோகன் எழுதினால் 10 ஆயிரம்

new-delhi-municipality-council

ரொக்கமில்லா பணப் பரிமாற்றத்தைத் ஊக்குவிக்கும் விதத்தில் ஸ்லோகன் எனப்படும் இலக்கு உரையை எழுதினால் 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என டெல்லி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

டெல்லி மாநகராட்சி “ரொக்கமில்லா பணப்பரிமாற்றம் சாத்தியம்” எனும் கருத்தை வலியுறுத்தும் விதத்தில் சிறந்த இலக்கு உரைகளை எழுதி அனுப்பும் நபர்களுக்கு பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. முதல் பரிசு ரூ.1௦,௦௦௦, இரண்டாம் பரிசு ரூ.7,5௦௦, மூன்றாம் பரிசு ரூ.5,௦௦௦ என அறிவிக்கபட்டுள்ளது. இந்த தலைப்பில் வாக்கியங்களை எழுதி அனுப்ப 2௦17 ஆம் ஆண்டு ஜனவரி 1௦ ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் www.ndmc.gov.in என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்பு நாட்டில் உள்ள பல்வேறு மாநில அரசுகள் மின்னணு பணப்பரிவர்த்தனைக்கு மாறி வருகிறது. இந்த வகையில் டெல்லி மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் செலுத்தக்கூடிய மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம் போன்ற பிற கட்டணங்கள், வரிகள் ஆகியவற்றை மின்னணு பரிவரத்தனை மூலம் செலுத்த ஏற்பாடு செய்து வருகிறது. இணைய வழி வங்கி பரிமாற்றம், டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள், வரிகளை செலுத்தலாம். இது தொடர்பாக டெல்லி மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. மின்னணு பரிவர்த்தனையில் ஈடுபடும் பொதுமக்களிடம் மாநகராட்சி நிர்வாகம் தனியாக எந்த கட்டணமும் வசூலிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close