[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50000..!

up-cm-announces-rs50000-for-critically-injured-and-rs25000-for-those-who-sustained-minor-injuries

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே பயணிகள் ரயில் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50000 வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

விபத்தில் சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25000 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை அடுத்த சீல்டா நகரிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நோக்கி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலின் 15 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை எனவும், 44 பேர் காயமடைந்து உள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.25000 மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50000 உதவித்தொகையாக வழங்கப்படும் என உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close