[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

பயணிகள் ரயில் தடம் புரண்டதில் உயிரிழப்பு இல்லை... ரயில்வே விளக்கம்

train-accident-in-uttarpradesh

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே பயணிகள் ரயிலின் 15 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை என ரயில்வே துறை விளக்கமளித்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை அடுத்த சீல்டா நகரிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நோக்கி விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. கான்பூர் அருகே அதிகாலை ரயில் வந்தபோது, பெட்டிகள் தடம்புரண்டன. தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் பலர், இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதுல் இல்லை எனவும், 44 பேர் காயமடைந்து உள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர், காயமடைந்த 40க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஜ்மீர் ரயில் தடம்புரண்டதால் அந்த வழித்தடத்தில் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கவிழ்ந்து கிடக்கும் ரயில் பெட்டிகள் மற்றும் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரயில் தடம்புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. கான்பூர் அருகே கடந்த மாதம் நடந்த ரயில் விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close