[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

இது எமர்ஜென்சி இல்லை.. சூப்பர் எமர்ஜென்சி: மம்தா

mamtha-about-demoniestation

பண மதிப்பிழப்பு நடவடிக்கையானது கூட்டாட்சித் தத்துவத்தை ஒட்டுமொத்மாக சீர்குலைத்து விட்டது. இது எமர்ஜென்சி இல்லை. சூப்பர் எமர்ஜென்சி என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு விவகாரத்தால் மோசமாகியுள்ள நிலைமை 50 நாட்களுக்குப் பிறகும் சீரடையவில்லை என்றால் பிரதமர் மோடி பதவி விலகத் தயாரா என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு விவகாரத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. காங்கிரஸ் கட்சியின் இந்த முயற்சிக்கு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், திமுக, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதற்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவிக்கவில்லை.

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை முழுமையாக தோற்றுவிட்டது என்று விமர்சித்தார். ஏழைகள் மற்றும் சிறு, குறு வணிகர்கள் மீதான நேரடி தாக்குதல் இது என்று குறிப்பிட்ட ராகுல், இதுதொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று குறிப்பிட்டார். இந்த நடவடிக்கை நாட்டை 20 ஆண்டுகளுக்குப் பின்தங்கச் செய்து விட்டது. மக்களின் நிலை குறித்து கவலை இல்லாத இந்த அரசு, தான் நினைத்தை எல்லாம் செய்துகொண்டிருக்கிறது என்று குற்றம்சாட்டினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close