[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

ஆன்லைன் ஷாப்பிங்கில் பெண்களை முந்திய இந்திய ஆண்கள்

indian-men-shopped-more-online-than-women-in-2016-says-flipkart

நடப்பு 2016ம் ஆண்டில் பெண்களை விட இந்திய ஆண்களே அதிக அளவில் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்துள்ளதாக ஃபிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஷாப்பிங் என்றாலே அது பெண்கள் விஷயம் என்ற எண்ணம் உங்களுக்கிருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். இந்தியாவில் இணைய வர்த்தகத்தில் முன்னணி வகிக்கும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் 2016ம் ஆண்டில் ஷாப்பிங் குறித்து ஃப்ளிப் ட்ரெண்ட்ஸ் 2016 என்ற பெயரில் ஆய்வு செய்தது. அந்த ஆய்வில் எலெக்ட்ரானிக் பொருட்கள், காலணிகள், உடைகள் உள்ளிட்ட பொருட்களை ஷாப்பிங் செய்ததில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆண்களே என்பது தெரியவந்துள்ளது. மேலும், 25 முதல் 34 வயதுக்குட்பட்ட ஆண்களே ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆச்சர்யம் அளிக்கும் வகையில் 15 சதவீத வாடிக்கையாளர்கள் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள். நாடு முழுவதும் உள்ள நூறு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களிடம் கடந்த ஜனவரி 1 முதம் டிசம்பர் 15ம் தேதி வரை நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல்களை ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close