[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 25 பக்தர்கள் காயம்

at-least-20-sabarimala-pilgrims-injured-in-stampede

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 25 பக்தர்கள் காயமடைந்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐயப்பனுக்கு தங்கஅங்கி நாளை அணிவிக்கப்பட உள்ளது. இந்தநிகழ்வை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்தநிலையில் சபரிமலை சன்னிதானம் அருகே ஒரே நேரத்தில் அதிகளவு பக்தர்கள் குவிந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 25 பேர் காயமடைந்ததாக கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் ஆர்.கிரிஜா தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் அனைவரும் அனைவரும் சன்னிதானம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் அனைவரும் வெளிமாநில பக்தர்களே என்று கூறப்படுகிறது. சபரிமலையில் 41 நாள் மண்டல பூஜைகள் நாளையுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close