[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியே ஆட்சியமைக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS டெல்லியில் மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் சென்னையை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் – சீமான்
  • BREAKING-NEWS அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு

பெட்ரோல் நிலையத்தில் டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்துவதா?... வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை

petrol-station-debit-credit-card-use

வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பும்போது மின்னணு அட்டைகளைப் பயன்படுத்த ஊக்கத் தொகையை அரசு அறிவித்துள்ள நிலையில், அதனால், பெட்ரோல் பங்க்குகளில் விபத்து நேரலாம் என வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெட்ரோலிய அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்த அமைப்பு, பெட்ரோல் விநியோகிக்கும் பம்ப் அருகே மின்னணு கருவியில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட தூரத்துக்கு பிறகே அவற்றை அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அறிவிப்பு வெளியிடுமாறு மத்திய அரசுக்கு வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் கட்டுப்பாட்டாளர் கடிதம் எழுதியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவித்து வரும் நிலையில் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close