[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி

students-pass-class-in-getting-reduced

நாடு முழுவதும் மாணவர்களுக்கான ‌கட்டாயத் தேர்ச்சியை 8-ஆம் வகுப்பிலிருந்து 5-ஆம் வகுப்பாக குறைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்களின் கூட்டம் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கான கட்டாயத்தேர்ச்சியை 8-ஆம் வகுப்பு வரை வைப்பதால், மாணவர்களின் கல்வித்தரம் குறைவதாகவும், பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் பெரும் சிரமம் அடைவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மாணவர்களின் கட்டாயத்தேர்ச்சியை 5-ஆம் வகுப்பாக வருகிற 2018-ஆம் ஆண்டு முதல் மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான சட்டதிருத்த வரைவுகள், தயார் செய்யப்பட்டு அவை சட்டத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அவற்றுக்கு சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, அதனை சட்டமாக நிறைவேற்றுவதற்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close