[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மணல் சிற்பத்தில் ஆயிரம் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்... ஒடிசா மணல் சிற்பக் கலைஞர் சாதனை

sudaharsan-patnaayak-sand-sculpture-creates-record-in-limca-book

ஒடிஷா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பத்தில் ஆயிரம் கிறிஸ்துமஸ் தாத்தாக்களை வடிவமைத்து மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் சாதனை படைத்தார்.

இயேசு கிறிஸ்துவின் பிறந்ததினமான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒடிசாவைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், கிறிஸ்துமஸ் பண்டிகையக் கொண்டாடும் வகையில் பூரி கடற்கரையில் ஒரே இடத்தில் 1,000 கிறிஸ்துமஸ் தாத்தாக்களை மணல் சிற்பமாக வடிவமைத்துள்ளார். இந்த மணல் சிற்பம் தற்போது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இதன்மூலம் தன்னுடைய முந்தைய சாதனையான 500 கிறிஸ்துமஸ் தாத்தாக்களை கொண்டு உருவாக்கிய மணல் சிற்பத்தை தானே முறியடித்துள்ளார். இதுபற்றி சுதர்சன் பட்நாயக் கூறுகையில், இந்த மணல் சிற்பம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும், இதற்காக சுமார் 1,000 டன் மணல் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close