[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

தேசிய சின்னத்தை வடிவமைத்த தீனாநாத் பார்கவா மறைவு

dinanath-bhargava-who-sketched-national-emblem-dies-at-89-in-indore

தேசிய சின்னமாக அசோகச்சக்கரத்தை வடிவமைத்த குழுவில் இடம் பெற்றிருந்த தீனாநாத் பார்கவா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 89.

சுதந்திரத்துக்கு பிறகு உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் கைகளால் எழுதப்பட்டது. அரசியலமைப்பு புத்தகத்தை அலங்கரிக்க ஓவியர்கள் குழுவும் அமைக்கப்பட்டது. அந்த குழுவில் இடம்பெற்றிருந்த 20 வயது இளைஞர் தினாநாத் பார்கவா, தேசிய சின்னத்தை வடிவமைத்த குழுவின் முக்கிய பங்காற்றினார். மேலும், அரசியலமைப்பு புத்தகத்தையும் அவர் அலங்கரித்தார். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இதயநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வந்த பார்கவா, மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தின் பீடல் மாவட்டத்தில் உள்ள முல்டாய் எனும் கிராமத்தில் கடந்த 1927ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி பார்கவா பிறந்தார். அவருக்கு 2 மகள்கள் உள்பட நான்கு குழந்தைகள் உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close