[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு 3 மடங்கு அதிகரிப்பு: தீருமா பணத்தட்டுப்பாடு?

increase-in-the-printing-of-new-banknotes

புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் மத்தியில் நாளொன்றுக்கு 35 லட்சம் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதாகவும் தற்போது அது 1 கோடியே 90 லட்சம் நோட்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் அந்த மையம் தெரிவித்துள்ளது. தற்போது நாசிக்கில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவதில்லை எனவும் அது கூறியுள்ளது.

நேற்றைய தினம் நான்கு கோடியே 3 லட்சம் கரன்சி நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் 500 ரூபாய் நோட்டுகள் ஒரு கோடியே 10 லட்சமும் 100 ரூபாய் நோட்டுகள் 1 கோடியே 20 லட்சமும் 50 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் தலா ஒரு கோடியும் அடக்கம்.

கடந்த நவம்பர் 11ம் தேதி 500 ரூபாய் நோட்டுகள் 5 லட்சம் ரிசர்வ் வங்கிக்கு அச்சடித்து அனுப்பப்பட்டன. கடந்த நாற்பத்தி மூன்று நாட்களில் மொத்தமாக பல்வேறு மதிப்பிலான நோட்டுகள் 82 கோடியே 80 லட்சம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் 25 கோடி நோட்டுகள் 500 ரூபாய் நோட்டுகள் ஆகும்.

ஜனவரி 31ம் தேதிக்குள் பல்வேறு வகையிலான மதிப்பில் 80 கோடி நோட்டுகள் அச்சடிக்க நாசிக் அச்சகம் தீர்மானித்துள்ளது. அதில் பாதி நோட்டுகள் 500 ரூபாய் நோட்டுகளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close