[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

ஒடிஷாவில் தொடரும் சோகம்... இறந்த தந்தையின் சடலத்தை தோளில் தூக்கி சென்ற மகன்..!

man-forced-to-carry-father-s-body-on-shoulders-in-odisha

ஓடிஷாவில் இறந்தவரின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் இறந்த தந்தையின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற அவல நிலை அரங்கேறியுள்ளது.

ஒடிஷாவில் உயிரிழந்த மகளின் உடலுடன் ஆம்புலன்ஸிலிருந்து பாதியில் இறக்கிவிடப்பட்ட தந்தை தினபந்து கேமுது என்பவர் தனது மகளின் உடலை தூக்கிக்கொண்டு 6 கி.மீ தூரம் நடந்து சென்ற அவல சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் மாஞ்சி என்பவர் இறந்து போன தனது மனைவியின் உடலை 10 கிலோமீட்டர் தொலைவுக்கு சுமந்து சென்ற சம்பவமும் ஒடிசாவில் நடந்தது.

இந்நிலையில் ஒடிஷாவில் மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கொதசகி எனும் கிராமத்தை சேர்ந்த சரத் பாரிக் என்பவரின் தந்தை உடல் நலக்குறைவு காரணமாக கிராம சுகாதார மையத்தில் இறந்துள்ளார். மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் தன் தந்தையின் சடலத்தை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தன் தோளில் தூக்கி சென்றுள்ளார் கொதசகி. சாலையில் சடலத்தை தூக்கி சென்ற அவருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் உதவி செய்து சரத்தின் தந்தையை வீட்டில் கொண்டு சேர்த்துள்ளார்.

சரத் பாரிக் தந்தையின் உடல் இறந்து பல மணி நேரத்திற்கும் மேலாக வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த அம்மருத்துவமனை மருத்துவர் அஜித் தாஸ், இந்த சம்பவம் குறித்து தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்கு மருத்துவமனையில் எந்த வசதியும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close