[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

மதுபான கடை மேலாளர் கொலையில் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

cctv-footage-released-in-delhi-bar-officer-death

தெற்கு டெல்லியில் அரசு மதுபான கடை மேலாளர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

தெற்கு டெல்லியை அடுத்துள்ள மிஹாருலி பகுதியில் அரசு மதுபான கடை ஒன்றில் பிரிஜ் பூஷன் என்பவர் கடை மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி சுமார் 11 மணியளவில் மதுபானக் கடையை பூட்டிவிட்டு தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 3 நபர்கள் பிரிஜ் பூஷன் காரை நிறுத்தி அவரை சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து மற்றொரு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் பிரிஜ் பூஷனை துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவத்தை கண்டு அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத‌து பிரிஜ் பூஷன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமபவ இடத்தில் இருந்த சிசிடிவியில் பதிவான வீடியோ காட்சியை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். மேலும் சிசிடிவியில் பதிவான வீடியோ ஆதாரங்களை வைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close