[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

பணமதிப்பிழப்பு விவகாரத்தை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானைப் போன்றவர்கள்.. பிரதமர் மோடி

opposition-s-protest-is-like-pakistan-army-s-cover-fire-to-militants-pm-on-note-ban

பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராகப் போராடுபவர்கள் பயங்கரவாதிகளை ராணுவம் மூலம் காக்கும் பாகிஸ்தானைப் போன்றவர்கள் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி, அவரது சொந்த தொகுதியான வாரணாசியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, ராணுவம் மூலம் பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பாகிஸ்தான் போலவே, பணம் மதிப்பிழப்பு விவகாரத்துக்கு எதிராக போராடுபவர்கள் ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் முடங்கியதைக் குறிப்பிட்டு பேசிய பிரதமர், ஒரு சில அரசியல் வாதிகள் இப்படி ஊழலுக்கு ஆதரவாக இருப்பார்கள் என நான் கற்பனை கூடச் செய்து பார்க்கவில்லை என்றார். இதேபோல, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியைக் குறிப்பிட்டு பேசிய மோடி, ஒருவழியாக மேடைகளில் பேச அவர் கற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் அவர் பேசினார் ஆனால் பூகம்பம் எதுவும் நல்லவேளையாக வரவில்லை எனவும் மோடி ராகுலைக் கிண்டல் செய்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close