[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை கலாய்த்துத் தள்ளிய நெட்டிசன்கள்

when-sichuan-becomes-siachen-it-s-a-tricky-mistake

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் சீன மாகாணமான சிச்சுவான் பெயரை தவறாக சியாச்சின் எனக் குறிப்பிட்டதால் நெட்டிசன்கள் பாவம் அவரை கலாய்த்து தள்ளிவிட்டனர்.

சமூக வலைதளங்களில் கவனமாக இருக்க வேண்டியது இன்றைய சூழலில் அவசியமாகிவிட்டது. அங்கு நாம் பதிவிடும் ஒவ்வொரு கருத்தும் நமக்கு எதிராக திரும்பும் உடனடி அபாயம் உள்ளது. இந்த சூழலில், பெங்களூரு உள்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பாக சீனாவின் சிச்சுவான் (Sichuan) மாகாண அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக சித்தராமையாவின் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களோடு பதிவு ஒன்று வெளியானது. ஆனால், சிச்சுவான் என்பதற்குப் பதிலாக இமயமலையில் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடும் மலைச்சிகரமான சியாச்சின் (Siachen) என்று அவர் குறிப்பிட்டிருந்தார். சியாச்சின் பனிச்சிகரம் இந்தியா மற்றும் சீன அரசுகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சியாச்சினுக்கும் சிச்சுவானுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றும் சியாச்சின் என்ன சீனாவிலா இருக்கிறது என்றும் நெட்டிசன்கள் கலாய்த்துத் தள்ளி விட்டனர்.

இதே போல் நெட்டிசன்களின் ட்ரோலுக்கு சித்துவும் ஆளானார். பின்னர் தனது தவறை உணர்ந்து அந்த ட்வீட்டினை அவர் அழித்து விட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close