[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் கால்வாயைச் சுத்தம் செய்த பட்டதாரிகள்

graduates-canal-without-protective-equipment-has-been-cleaned

உத்தரபிரதேச மாநிலத்தில், துப்புரவுத் தொழிலாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கால்வாய் சுத்தம் செய்யும் செயல்முறைத் தேர்வு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நடத்தப்பட்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பணிக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானவர்கள் பொறியியல் மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் ஸ்வட்ச் பாரத் திட்டத்தின் அடுத்த முயற்சியாக டாய்லெட்டைக் கண்டறியும் கூகுள் டாய்லட் லொக்கேட்டர் செயலி வெளியிடப்படும் நாட்டில் தான் வேலையில்லா திண்டாட்டத்தின் காரணமாக இந்த வேலையாவது தமக்கு கிடைத்துவிடதா என பட்டப்படிப்புப் படித்த மாணவர்கள் துப்புரவுத் தொழிலாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

மொராதாபாத் மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு 1,083 காலி இடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு 1,100 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் ‌83 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முதுகலை மற்றும் பொறியியில் பட்டம் பயின்றவர்கள். இந்நிலையில் செயல்முறைத் தேர்வு என்ற பெயரில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அவர்களைக் கால்வாயில் சுத்தம் செய்ய வைத்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. வேலை இல்லாத நிலையில் விருப்பமற்ற தேர்வில் பங்கேற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக தேர்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close