[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

யார் இந்த சேகர் ரெட்டி...? ரூ.131 கோடி, 171 கிலோ தங்கம் பறிமுதல்

rs-131-crore-171-kg-of-gold-seized-from-him-sekar-reddy

யார் இந்த சேகர் ரெட்டி என நாடே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு அவரிடமிருந்து பணமும், நகைகளும் சிக்கின. சேகர் ரெட்டி வழக்கின் அடுத்தகட்டம் என்ன? என்பது குறித்து காணலாம்.

சேகர் ரெட்டி இவர் வேலுரைச் சேர்ந்தவர். இவர் மற்றும் இவர் தொடர்புடைய இடங்களில் ஒருவாரத்திற்கும் மேலாக அதிரடி சோ‌தனைகள் நடத்தியது வருமான வரித்துறை. வீடுகள், அலுவலகங்கள், தனியார் ஹோட்டல் அறைகள் என சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் இருந்து கோடிக்கணக்கில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுளள்ளன.

கிலோ கணக்கில் தங்கம் பிடிபட்டுள்ளது. இதையடுத்து சேகர் ரெட்டி மற்றும் இவரது சகாக்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்புகளான அமலாக்கப்பிரிவு, சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளன.

சேகர் ரெட்டி உள்ளிட்டோரின் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 131 கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கம், 171 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வளவு சொத்துக்களை சேகர் ரெட்டி சேர்த்தது எப்படி? மணல் குவாரிகளில் விதிமீறல்களைச் செய்து பணம் சேர்த்தாரா? என விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் மேலும் பல அதிரடி உண்மைகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close