[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

அதிமுக விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை: வெங்கையா நாயுடு

aiadmk-did-not-want-to-interfere-in-the-affairs-venkaiah-naidu

அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை என மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறைக்கு அவர் அளித்த சிறப்பு நேர்க்காணலில், தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கிறது. அதேநேரத்தில் அதிமுகவின்‌ உட்கட்சி விவகாரங்களில் தலையிட நாங்கள் விரும்பவில்லை என்றார். அதிமுகவின் பொதுச் செயலாளராக யார் வருவார், கட்சிக்கு யார் தலைமைப் பொறுப்பை ஏற்பார் ‌என்பதெல்லாம் அவர்களது விருப்பம் என்று தெரிவித்த வெங்கையா நாயுடு, தமிழக முதலமைச்சர் டெல்லி வருவதற்கு முன்பே, தமிழகத்தின் வர்தா புயல் பாதிப்பை மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் கவனத்திற்கு தான் எடுத்துச் சென்றதாகக் கூறினார். தமிழகத்திற்கு விரைவாக மீட்புக்குழுவை அனுப்ப வேண்டும் என உள்துறை மற்றும் நிதியமைச்சரிடம் வலியுறுத்தினேன் என்றும் வெங்கையா நாயுடு கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close