[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்

சபாநாயகரின் செங்கோலை தூக்கிக் கொண்டு ஓடிய எம்.எல்.ஏ

tripura-assembly-speakers-mase-snatches

திரிபுரா சட்டப்பேரவைக் கூட்டத்தின் போது சபாநாயகர் ராமேந்திர சந்திரனின் செங்கோலை எம்.எல்.ஏ சுதீப் ராய் பர்மன் எடுத்துக் கொண்டு ஓடினார்.

திரிபுரா சட்டப்பேரவைக் கூட்டத்தின் போது, அம்மாநில வனத்துறை அமைச்சர் நரேஷ் ஜமாடியா மீதான பாலியல் குற்றசாட்டு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தினர். ஆனால் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் விவாதத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என சபாநாயகர் ராமேந்திர சந்திர தேப்நாத் தெரிவித்தார். விவாதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து தங்களது எதிர்ப்பைக் காட்டும் விதமாக திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சுதீப் ராய் பர்மன், சபாநாயகரின் இருக்கையில் வைக்கப்பட்டிருந்த செங்கோலை எடுத்துக்கொண்டு முழக்கமிட்டவாரே சட்டமன்றத்தில் இருந்து ஓடினார். அவரை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் சபாநாயகரின் செங்கோலை, சுதீப் ராய் பர்மனிடம் இருந்து பாதுகாவலர்கள் வாங்கி வந்து சபாநா‌யகர் இருக்கையில் வைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close