[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

பண‌மதிப்பிழப்பு ஏழைகளுக்கு எதிரானது.... ராகுல்காந்தி குற்றச்சாட்டு

rahul-gandhi-cash-affair-accusation-against-the-poor

பிரதமர் ‌நரேந்திர மோடியை அரசியல் ரீதியாகத்தான் எதிர் கொள்ளவேண்‌‌டும் என கூறியுள்ள காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ‌காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களில்‌ மோடி ஒழிக என முழக்கமிடவேண்டாம் என்றும் அக்கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் நட‌பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி இதுபோன்ற மோசமான வார்த்தைக‌‌ளை பயன்படுத்துவது ஆர் எஸ் எஸ் போன்ற அமைப்புகள் தான் என கூறினார். மேலும் நவம்பர் 8ம் தேதி எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு முடிவு ‌கறுப்பு பணத்திற்கோ, ஊழலு‌க்கோ எதிரானது அல்ல என கூறிய‌ ராகுல் காந்தி அந்த முடிவு விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் எதிராக எடுக்கப்பட்டது என ‌குறிப்பிட்டார். தாம் பிரதமரை சந்தித்த‌போது ஏழை விவசாயிகளின் கட‌‌ன்களை தள்ளுபடி செய்யு‌ம்படி கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் பிரதமர் எந்த உறுதியும் அளிக்கவில்லை எனவும் அதே நேரத்தில் பணக்காரர்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் பெரும்பகுதி சொத்துக்கள் 50 குடும்பங்களின் வசம் உள்ளதாகவும், இந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நரேந்திர மோடி‌யுடன் அமெரிக்கா, சைனா போன்ற ‌‌நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் எனவும் சுட்டிக்காட்டினார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதுதான் என்றும் திட்டமிடுதல் தான் சரியில்லை என சிலர் கூறுவதாக ராகுல்காந்தி குறிப்‌பிட்டார். ஆ‌னா‌ல் திட்டமும் சரியாக இரு‌ப்பதாகவும், ஏழை மக்களின் பணத்தை எடுக்கமுடியாமல் வங்கிகளில் குவிப்பதே மத்திய அரசின் திட்டம் என்று ராகுல்காந்தி கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close