[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு.... மாறன் சகோதரர்கள் ஜாமீன் தொடர்பான உத்தரவு ஒத்திவைப்பு

aircel-maxis-case-orders-of-bail-and-adjourned-the-maran-brothers

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு ஜாமீன் தருவது தொடர்பான உத்தரவு வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது, ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி, ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்துள்ளார் எனவும் அதற்கு கைமாறாக மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து சன் டிடிஎச் நிறுவனம் 599 கோடி ரூபாய் முறைகேடாக முதலீடு பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இம்முறைகேடு தொடர்பாக நடுவண் புலனாய்வுச் செயலகம் குற்றவழக்குப் பதிவு செய்து, சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் முன் விசாரணைக்கு வந்தபோது மாறன் சகோதரர்களுக்கு ஜாமீன் தருவது தொடர்பான உத்தரவு வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்தார். வழக்கு ஆவணங்கள் மிக அதிகளவில் இருப்பதால் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் பணிகள் தாமதம் ஆவதாகவும் அவர் விளக்கமளித்தார். ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில்‌, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், மலேசிய தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close