[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

தேசிய கீதத்தை அவமதித்ததாக கேரள எழுத்தாளர் கைது

disrespect-to-the-national-anthem-writer-arrested-in-kerala

தேசிய கீதத்தை அவமதித்‌த குற்றச்சாட்டில்‌ கேரள எழுத்தாளரும் நாடகக் கலைஞருமான கமல் சவரா கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய கீதத்தை அவமதிக்கும் விதமாக ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவினர் கொல்லம் காவல் துறையிடம் புகார் செய்தனர். இதன் அடிப்படையில் கமல் சவராவை கைது செய்த காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. எனினும், இந்த விஷயத்தை பாரதிய ஜனதா கட்சி அரசியலாக்கி வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். எழுத்தாளர் கமல் சவராவை கமாலுதீன் என அழைப்பது மத வெறுப்பு மனப்பாங்கை காட்டுவதாகவும் இந்தப் போக்கை மாநில அரசு அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close