[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

நாடெங்கும் தொடரும் கறுப்பு பண வேட்டை...! கட்டுக்கட்டாக சிக்கும் புதிய ரூபாய் நோட்டுகள்

the-new-notes-seized-in-gujarat

நாடெங்கும் தொடரும் கறுப்புப் பண வேட்டையில், கட்டுக் கட்டாக புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கி வருகிறது.

குஜராத் மாநிலம் சூரத்தில் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் கறுப்புப் பணத்தை வருமான வரித் துறையினர் கைப்பற்றியுள்ளனர். டீக்கடைக்காரராக இருந்து பைனான்சியராக மாறியவரிடம் இருந்து இப்பணம் சிக்கியுள்ளது. இவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகளாகும். முன்னதாக இதே ஊரில் பைஜாவாலா என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சிக்கின.

இதேபோல், தெலங்கானா தலைநகர் ஐதராபாதில் குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் 66 லட்சம் ரூபாய் கறுப்புப் பணம் சிக்கியதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. இவை அனைத்துமே புதிய ரூபாய் நோட்டுகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நடத்தப்பட்ட சோதனையில் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close