[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

80% நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பின: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

rbi-said-80-of-banknotes-returned-to-the-banks

செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 80 சதவிகிதம் வங்கிகளுக்கு திரும்பி வந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

டிசம்பர் 10ம் தேதி நிலவரப்படி, 12 லட்சத்து 44 ஆயிர‌ம் கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 லட்சத்து 61ஆயிரம் கோடி ரூபாய்க்கு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மக்களுக்கு நேரடியாக வங்கிகள் மாற்றித் தந்திருக்கின்றன.

பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் என்ற நிலையில், இன்னும் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் வெளியே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது மொத்த தொகையில் சுமார் 20 சதவிகிதம். இவற்றை டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close