[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

சூரிய மின்தகடு முறைகேடு...சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை

saritha-nair-sentenced-to-3-years-jail

சூரிய மின்தகடு மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சரிதா நாயர் மற்றும் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு கேரள நீதிமன்றம் 3 ஆ‌ண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நாகர்கோவிலில் காற்றாலை அமைக்கவும், சூரிய மின்தகடு பெற்றுத் தருவதாகவும் கூறி ரூ.40 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக சரிதா நாய‌ர் மீது சாஜத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான வழக்கு பெரும்பாவூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரிதா நாயர் மற்றும் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நடிகர் ஷாலு மேனன் மற்றும் அவரது தாய் ஆகியோர் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரமில்லை என்று கூறி நீதி‌பதி அவர்களை விடுவித்தார். கேரளாவையே உலுக்கிய இந்த சூரிய மின்தகடு ஊழலில் முதல் முறையாக தீர்ப்பு வெளியாகியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close