[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

ஜம்முவில் நீதிமன்ற அனுமதி பெறாமல் பள்ளிகளை மூடக்கூடாது... உத்தரவை கேட்டதும் மாணவர்கள் உற்சாகம்

school-children-celebrate-after-jk-hc-restrained-the-state-government-from-closing-any-school

ஜம்மு காஷ்மீரில் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் அரசு பள்ளிகளை மூடக்கூடாது என அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

ஜம்முவில் உள்ள 3,000 அரசு பள்ளிகள் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மூடப்பட்டன. இதனால் மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதாக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு பள்ளிகளை மூட தங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், குறைவான மாணவ-மாணவிகள் இருக்கின்றனர் என்பதை காரணமாக காட்டி பள்ளிகளை மூடக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதனையறிந்த மாணவ-மாணவிகள், பள்ளிகளை மூடக் கூடாது என்ற உத்தரவை கேட்டு ஆட்டம் போட்டும், மேளம் இசைத்தும் கொண்டாடினர்.

இதுகுறித்து நீலம் என்ற மாணவி கூறுகையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். தங்களுக்காகக் குரல் கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், தங்களுடைய பள்ளி தங்களுக்கு மீண்டும் கிடைத்துள்ளது எனவும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். ‌ஆசிரியர்களுக்கு வேலை போய்விடும் என்பதால் தங்களுக்கு ஆதரவாக பேசவில்லை எனக் கூறிய அவர், தாங்களே தங்களது உரிமைக்காக போராடியதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது போராட்டத்திற்கு பலன் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பொதுவாக பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்காதா என ஏங்கும் மாணவ-மாணவிகள் மத்தியில் பள்ளிளை மூடக் கூடாது என்ற உத்தரவை இவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close