[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

டெலிவரி செய்யச்சென்ற ஃபிலிப்கார்ட் ஊழியர் கொலை: ஜிம் ட்ரெய்னர் கைது

bangalore-flip-kart-delivery-boy-murder

பெங்களூருவில் ஃபிலிப்கார்ட் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியரை கொலை செய்ததாக ஜிம் ட்ரெய்னர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூருவில் ஃபிலிப்கார்ட் இணையவழி வர்த்தக நிறுவனத்தில் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியராக நஞ்சுண்டசாமி என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 9 ம் தேதி இவர் வழக்கம்போல் பணிக்கு சென்றார். பணிக்கு சென்று 2 நாட்கள் ஆகியும் திரும்பி வராததால் அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவர் பணிபுரிந்த அலுவலகத்தில் சென்று விசாரணையை மேற்கொண்டனர். அங்கு கிடைத்த தகவலின் பேரில் வருண்குமார் என்ற ஜிம் ட்ரெய்னரை பிடித்து விசாரித்ததில் நஞ்சுண்டசாமியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

வருண்குமார் ஃபிலிப்கார்டில் மொபைல்போன் ஆர்டர் செய்திருந்தார். கடந்த 9ம் தேதி நஞ்சுண்டசாமி வருண்குமாருக்கு போனை டெலிவரி செய்வதற்காக அவரது ஜிம்மிற்கு சென்றார் . அங்கிருந்த வருண்குமார், நஞ்சுண்டசாமியை இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளார். இதில் நஞ்சுண்டசாமி நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். மயக்கநிலையில் இருந்தவரை கழுத்தறுத்து கொலை செய்து, பின்பு சடலத்தை தனது ஜிம்மிற்கு கீழே உள்ள தரைதளத்தில் கொண்டு போய் மறைத்து வைத்துள்ளார்.

பின்னர் நஞ்சுண்டசாமி கொண்டு வந்த பைகளில் இருந்த பிற செல்போனையும் மற்ற பொருட்களையும் எடுத்துச் சென்றுவிட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு வருண்குமார் தனது ஜிம்மை திறக்கவில்லை. நஞ்சுண்டசாமி கடைசியாக வருண்குமாருக்கு டெலிவரி செய்ய சென்ற பிறகு காணவில்லை என்பதால் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அங்கு சென்று விசாரித்துள்ளனர். காவல்துறை விசாரணையில் நஞ்சுண்டசாமியை கொலை செய்ததை வருண்குமார் ஒப்புக்கொண்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close